நரகாசூரர்கள் இன்னும் சாகவில்லை
நரகாசூரர்கள்
இன்னும் சாகவில்லை...
நம்புங்கள்
நாட்டில்
ஊழல்வாதிகளாய்
உலா வருகின்றார்கள்
நரகாசூரர்கள்
இன்னும் சாகவில்லை...
சில நேரங்களில்
நீதிமான்களாய்
நியாயத்தை
நியாய விலையில்....
நியாயம் பேசுகின்றார்கள்
நரகாசூரர்கள்
இன்னும் சாகவில்லை...
அவ்வப்போது
அநியாயத்தை
அரசியல் செய்கின்றார்கள்
அறியாமையை
இலவசமாக விதைக்கின்றார்கள்
நரகாசூரர்கள்
இன்னும் சாகவில்லை...
மதம் பிடித்த யானைகளாய்
மாறித்தான் போனார்கள்
மனிதாபிமானத்தை
மண்ணுக்குள் புதைக்கின்றார்கள்
நரகாசூரர்கள்
இன்னும் சாகவில்லை...
அமெரிக்க ஒபாமாக்களுக்கு
வயிற்று வலி என்றால்....
இங்கே இருக்கும்
இந்திய அரசியல்வாதிகள்
கசாயம் காய்க்கின்றார்கள்