என் கணவனே
என் கணவனே !!
என்னை ஒரு முறையாவது
திரும்பி பார்!!!
கண்ணின் இமை போல
காப்பாய் என ...
என் கரம் பிடித்து
உன் கரத்துடன்
இணைத்து வைத்தனர்!!!
பருவ பெண்ணான நான் ....
பருவ திளைப்பின்
பல வண்ண கனவுகளுடன்
பட்டாம்பூச்சியாய்
பறக்கவே ஆசை பட்டேன்!!!
சிறகுடைந்த பறவையாய்
உன் குடும்பமெனும் கூட்டிற்குள்
எனை சிறை வைத்து
கொண்டாய்!!!
பரந்து கிடப்பது
உன் வீடு மட்டுமே!!
உன் உள்ளமெனும் கூடு
மூடியே கிடக்கிறது!!!
என்னை பற்றியோ..
என் கனவுகளை பற்றியோ...
எப்போதாகிலும்
நீ அறிவாயா!!!
நீ அவசரத்தில்
கொடுக்கும் முத்தம் கூட
வியர்வையாய்
பிசுபிசுக்கிறது....
பகிர்தலுக்கு சாத்தியபடாத
கெடுபிடிகளுடன்
என்னையும் சேர்த்தே
அழைத்து கொண்டு
செல்கிறாய்
உன் பாதையில்
விதிக்கப்பட்ட விதி
நிர்ணயிக்கப்பட்ட உறவென
வேதாந்தம் பேசுவதில்
எனக்கு விருப்பம் இல்லை!!!!
எனக்கு
தனி பாதை வேண்டும்..
அது முட்கள்
நிறைந்ததாக
இருந்தாலும் கூட!!!!!!!!!