உஷ்
பார்
எப்படி வேண்டுமானாலும் பார்
எங்கே வேண்டுமானாலும் பார்
ஆடை இன்றி நிற்க்கும் - என்னை
ஆசை தீர பார்
வெட்கப்பட்டு நிற்கும் என்னை
மூச்சு முட்ட பார்
பனி போர்வை விலக விலக
இமைக்காமல் பார்
பார் பார்த்து பார்த்து ரசி
என்னை சுற்றும் உனக்கு
என்னையே தர காத்திருக்கிருகிறேன்
ஏற்றுகொள் என்னை
நீ கருப்பானவன்
நான் வண்ணமயமாய் ஜொலிப்பவள்
இருக்கட்டுமே
காதலுக்கு நிறம் ஒரு குறை அல்ல
நான் மனதார விரும்புகிறேன் உன்னை
நீ தயங்காமல்
என்னை உன் வசம் ஆக்கு
ஏய் கல்லா !
என்னை பார் என்றால்
என்தோழிகலையா பார்க்கிறாய்
வேண்டாம்
தன் தோழியின் காதலனாய் பார்க்கும்
அவர்களை
நீ காதலுடன் பார்ப்பது தவறு
நீ எனக்கானவன்
எனக்கு மட்டுமானவன்
போதும் போதும் பார்த்தது
வா என் மடியில் வந்து தஞ்சம் அடை
என் மேனி முழுக்க
உன் கால் தடத்தை பதிவு செய்
என் உடல் முழுக்க உன் பார்வையால் நடந்து
நடந்து தேய செய்
முடிந்த வரை முத்தத்தால்
வருடி விடு என்னை
. . . .. . . .. .
. . .. . . . . ..
ஏய் என்ன அவசரம் அதற்குள்
ஓ !
வந்த வேலை முடிந்து விட்டதா
சரி போ
என் நினைவு இருந்தால்
மீண்டும் திரும்பி வா
வந்து பார்த்து விட்டு போ
இன்னும் என் வாழ்வின் நீளம்
இன்றுவரை மட்டுமே
அதற்குள் ஒரு முறையேனும்
வந்து பார்த்துவிட்டு போ
என் செல்ல கருவண்டே
இப்படிக்கு
காதலுடன்
பூ.