விடைகள் தேடும் கேள்விகள்…

உள்ளே…
சாம்பல் மூடியபடி…
கனன்று கொண்டிருக்கும்,
நெற்றிக்கண் வீசிய பொறியில்,
மீதமிருக்கும்…
நெருப்பு துண்டொன்று…

கேள்விகளுக்கான,
வேள்வியினை…
இடையறாது…
நிகழ்த்தி கொண்டிருக்கின்றது…

கேள்விகளை எழுப்பியவன்,
சரணடைந்தாலும்,
கேள்விகள்…
அதைச் செய்வதில்லை…

விடையுடன்,
பரதேசியொருவன்,
கேள்விகளை தேடியலைகிறான்…

பதில்களால்,
எரிந்து போன
கேள்விகளை சேகரிக்கிறேன்…
நான்!

காரணமென்று…
ஒன்றுமில்லை,

ஆகச்சிறந்த,
பதில்கள்…
கேள்விகளாகவே
எப்போதும்
இருக்கின்றன…

ஏனெனில்,
கேள்வியில்
தொடங்கி…
கேள்விகளிலேயே…
எல்லா விவாதங்களும்,
முடிவுக்கு கொண்டுவரப்படுகின்றன…

வாழ்க்கை உட்பட…

எழுதியவர் : ரமணபாரதி (1-Nov-13, 2:39 am)
பார்வை : 143

மேலே