வெங்காயம்

உரித்து பார்த்தால்,
வாழ்க்கையின் ,
அர்த்தம் நீ !

உணராதவர்களுக்கு
கண்ணின்
எரிச்சல் நீ !

அசுர வளர்ச்சியில்
அமெரிக்க டாலருக்கு
போட்டி நீ !

திகட்டாத
பல்சுவை உணவு
கொடுத்தாய் நீ !

தேர்தல் களத்தில்
எதிர் கட்சிகளின்
நாகாஸ்திரம் நீ !

வெங்காயமே !
வீழாதே எதிரியின் கூடாரத்தில்
விதைக்காதே வெறுப்பை !
மக்கள் மனதில் !

எழுதியவர் : விஜயகுமார்.து (1-Nov-13, 3:07 am)
சேர்த்தது : துரை விஜயகுமார்
பார்வை : 67

மேலே