அகவல்

அகநிலை அறிந்தோனே -எந்தன்
அகவல் கேளாயோ -நான்
அகிலம் மறந்ததென்ன -உந்தன்
அகக்கண் பார்வையிலே

எழிலிய காதலினாற் - விழி
எழும்பிடக் களைக்குதைய்யா -கவி
எழுதிட முடிவதில்லை - புவி
உழலுதல் தெரிவதில்லை

முந்தைய துயரினையே -நான்
உன்தயவால் மறந்தேன் -முன்
அகத்தில் வீற்றிருந்தாய் -பின்
அகத்தானை மலர்ந்தாய்!

மங்கள தினத்தன்று -எங்கும்
மங்கள பாவொலிக்க -அங்கு
மகிழ்நன் நீயாவாய்! -என்னுள்
மகிழ்தல் வேர்விடுமே!

எழுதியவர் : தமிழின் மகள் ஹேமலத (1-Nov-13, 6:35 am)
பார்வை : 71

மேலே