ஓர்நாள்போதும்
முடிவேயில்லாத ஓர்பாதை
அதில் நீயும் நானும்...
தடுக்க யாருமில்லா -எம்
நடைப்பயணம்-துணையாய்
நிலவு ஒன்றே போதும்..!
வேற்றுக்கிரகம் இறைவனிடம்
கேட்டுப் பெற்றுக் கொள்ள
வேண்டும்-உனை
யாரும் கடத்திப்போகாது
காப்பாற்றி வைத்திருக்க..!
அச்சமில்லா நாட்களாய் அங்கே
அமையட்டும்..
அமைதியாய் ஓர்நாள் வாழ்ந்தாலும்
போதுமே நம் காதலிற்கு..!