இந்தியா
நெஞ்சில் வீரம் உள்ள வரை
எதிரியை கண்டு அஞ்ச தேவையில்லை
ஏழ்மை என்றும் மறைவதில்லை
பதுக்கிய பணங்கள் திரும்பும்வரை
சொல்லச் சொல்ல இனிக்குதட
நான் இந்தியன் என்பதில் பெருமையடா
இளைஞர் ஆட்சிக்காக ஏங்கும்
கலாம் வாழும் பூமியடா
அகிம்சை என்னும் வார்த்தை
நம் மகான் காந்தி வரம்மடா
தொல்லை கொடுக்கும் எதிரிகளை
வீழ்த்தி எறியும் வீரர்களே
அச்சம் இன்றி மக்கள் வாழ
எல்லையில் நிற்கும் சூரர்களே
உம்மை வணக்கி நிற்கின்றோம்
உம்மை போற்றி சொல்கின்றோம்
நீ தான் நாட்டின் "தளபதி"
இலஞ்சம் மட்டும் இல்லையென்றால்
நாட்டில் இல்லை காசு பஞ்சம்
பள்ளியில் இல்லை சாதி
பழகும் நட்பில் இல்லை சாதி
எங்கும் இல்லை சாதி
அதுதான் கடுவுள் கொடுத்த நீதி
மனிதன் அதையும் மாற்றிவைத்தான்
சாதியை காகிதத்தில் எழுதி வைத்தான்
விழித்திடுவோம் இந்தியா விழித்திடுவோம்
ஏழையின் கை பிடித்து உயர்த்திடுவோம்
வறுமை கோட்டை அழித்திடுவோம்
வல்லரசாக மாற்றிடுவோம்
நல்லரசாக மாற்றிடுவோம்
உருகும் பனியாய் இல்லாமல்
உயரும் மலையாய் எழுந்திடுவோம்
அழிக்கும் வெடியாய் இல்லாமல்
அணைக்கும் தாயாய் இருந்திடுவோம்
பாசம் என்னும் பொக்கிசத்தை
பரிசாக கொடுத்திடுவோம்
வெற்றி என்னும் தாகத்தை
ஒளியின் வேகம் மீறி அருந்திடுவோம்
இந்திய நாட்டில் வேலை செய்து
நன் இந்தியாவை உயர்த்திடுவோம்
அந்நிய நாடு மக்களுக்கு
நாம் இங்கே வாய்ப்பளிப்போம்........