முகப்புத்தகம்

தார் சாலை !
சாலையோரம் பேருந்து நிலையம்...

சிலரோ கைபேசியில் பேசியபடி,
சிலரோ முகப்புத்தகத்தில் மூழ்கியபடி,
இன்னும் சிலரோ பேருந்தை
எதிர்பார்த்து ஏமாந்தபடி...

நிமிடங்கள் நகர்ந்தன,
பேருந்து வந்தது.
அடித்துபிடித்து சீட்டை போட்டேன்,
எனக்கு அருகில் இடம் பிடித்தது முகப்புத்தகம்.

பேருந்து செல்ல...
இருக்கைகள் குறைந்தது மெல்ல.
அலறியது அருகில் இருந்த
முகப்புத்தகம்.
விசாரித்ததில் தெரிந்தது
முகப்புத்தகம் மறந்தானாம் பள்ளிப்புத்தகத்தை,
பேருந்து நிலையத்திலேயே!!!

எழுதியவர் : ரா. ராஜ் நாராயணன் (2-Nov-13, 12:19 am)
சேர்த்தது : Raj Kumar
Tanglish : mugapputthagam
பார்வை : 98

மேலே