வெறுப்பு

தேன் சொரியும் மலர்ச்சோலையும்
கீதமிசைக்கும் பறவைக் கூட்டங்களும்
எரிச்சலூட்டுகின்றன.

திருவிழாவில் பலூன்காரன் பின்னால்செல்லும்
குழந்தையாய் நான்.
நீயோ விழிப்பார்வையால் என்னை வரவேற்றுவிட்டு,
வீட்டுக்குள் சென்றுவிட்டாய்,
என்மனமும் உன்னுடனே உன்வீடிற்குள்,
கழற்றிவிடப்பட்ட செருப்பாய்
வாயற்படியில் நான்.

முங்கில் காட்டில் விழுந்த
கற்பூரத்திபம் போல்
என்னை முற்றிலுமாய் எரித்துவிட்டு
என்னதான் செய்யப்போகிறாய் நீ?

ஒரு வாய் நீருக்காக தன்னையே
விற்க துணியும்
பாலைவன யாத்ரிகனைப் போல்
உன் அன்பின் துளிகளுக்காய்
காத்திருக்கும் எனக்கு கருணை செய்வாயா?

நீ இத்தனை ஏமாற்றுக்காரனாய்
இருப்பாய் என்று எண்ணியதில்லை நான்.
எப்படியெல்லாம் வார்த்தை விளையாட்டுகளால்
கவர்ந்தாய் என்னை,
இறுதில் பிரிவைக் கொடுத்து
பிரிந்து சென்ற கள்வன் நீ.

நீ
உன் காதலைச் சொல்வதற்குள்
உடலெல்லாம் வியர்த்து நீ
நடுங்கிய நாட்கள்தான் எத்தனை?
சொற்போர் அரங்கில் எதிரிகளை
பந்தாடும் உன் சுழல்நாக்கு,
என்னிடம் எத்தனை முறை
குழறி இருக்கிறது0.

மின்னும் நட்சத்திர ஒளியில்
கடற்கரை மணலில்,
கடலலைச் சத்தை மட்டுமே
சாட்சி வைத்து,
காதலை பேசிய நாட்கள்தான்
எத்தனை.

ஊரும் உறவும்
எதிர்ப்பைச் சிந்த
சில நண்பர்க்ளுடேனே
நடந்த நம் திருமணம்
அனைத்தையும் மறந்து
ஏன் என்னை பிரிந்து சென்றாய்.

எந்த ஆதரவுமின்றி
உறவெல்லாம் நம்மை வெறுத்து ஒதுக்க,
உன்மார்பில் நான் புதைந்தழுதபோது
உறவுகள் நம்மை வெறுக்கவில்லை
நம் அன்பின் நெருப்பு அவர்களை
நெருங்க விடவில்லை என்று
அணைத்து ஆறுதல் தந்தவன்,
ஏன் என்னை தனிமையில்
தவிக்க விட்டு பிரிந்து சென்றாய்.

நம் நிலை உயர உயர
வெறுத்த உறவுகளெல்லாம்
ஒவ்வொன்றாய் அருகில் நெருங்கியபோது
அறுவெறுத்து ஒதுக்காமல்,
அணைக்கும் கரம் நீட்டி
ஆதரித்தவன் நீ.

என் அழகில் நீயும்
உன் ஆண்மையில் நானும்
ஒன்றாய் மலர்ந்த
நாட்களை எல்லாம் மறந்து
எங்கு நீ பிரிந்து சென்றாய்?

விரல்களை இணைத்து
உன் விழியில் நானும்
என் மனதில் நீயும் முழ்கி
இறுதிவரை அன்பு வார்த்தைகளை
கொட்டிய நீ,
எது பிடிக்காததால் என்னை பிரிந்துபோனாய்

உன் இதயம் நான் என்றாய்
இன்று யாரைக்கண்டு மோகித்து
என்னை பிரிந்தாய்
கடைசிவரை கைவிடமாட்டேன்
என்றவனே
என் முதுமையை கண்டா
மரணமாதின் மையலில்
வீழ்ந்து மறைத்து போனாய்.

எழுதியவர் : த.எழிலன் (2-Nov-13, 1:28 am)
சேர்த்தது : vellvizhe
Tanglish : veruppu
பார்வை : 110

மேலே