கமால்
கமால்
****************
ஒரு முறை கபீர்,தன மகனிடம்,மாடுகளுக்குத் தீனி வைக்கப் புல் வெட்டிக் கொண்டுவரப் பணித்தார்.போனவன் வெகு நேரமாகியும் திரும்ப வராததால் தேடிச்சென்றார்.புல் வெளி நடுவே அவர் மகன்ஆடிக் கொண்டிருந்தார்.அங்கே சிலு சிலுவெனக் காற்று வீசிக் கொண்டிருக்க புற்கள் அசைந்தாடிக் கொண்டிருந்தன.அவற்றுக்கு இணையாக அவர் மகனும் அசைந்தாடிக் கொண்டிருந்தார்.கபீர்,''என்ன செய்து கொண்டிருக்கிறாய்,இங்கே?''என்று வினவ அவரது மகன்,''நான் இங்கே வந்தபோது இந்தப் புற்கள் ஏகாந்தமாக ஆடிக் கொண்டிருந்தன.சட்டென்று ஒரு ஆனந்தம்என்னையும் தொற்றிக் கொண்டது.நானும் அவற்றுடன் சேர்ந்து ஆட ஆரம்பித்து விட்டேன்.ஆஹா,என்ன ஆனந்தம் அது!''என்றார்.கபீர்,''புல்லை வெட்டி எடுத்து வரச் சொன்னேனே?''என்று கேட்க,''என்னது?புல்லை வெட்டுவதா?என்னால் ஒருபோதும் முடியாது.ஆனந்தம் எனக்களித்த இவற்றுடன் எனக்கு நெருங்கிய உறவு ஏற்பட்டு விட்டது.என்னால் இவற்றைக் கிள்ளக் கூட முடியாது.''என்றார் மகன்.பிரமித்துப்போன கபீர்,மிகுந்த மகிழ்ச்சியில்,''கமால்''என்றார்.கமால் என்றால் அற்புதம் என்று பொருள்.அதன்பின் அவர் கமால் என்றே அழைக்கப்பட்டார்.
நன்றி ;இருவர் உள்ளம் தளம்