நம்பிக்கை
சின்ன வயதிலிருந்தே
கோவிலுக்கு செல்வது
கோகிலாவின் வழக்கம் .
அப்போதெல்லாம்
காரணமும் தெரியாது
கோரிக்கையும் கிடையாது
வயதுக்கு வந்த பின்
வாழ்க்கை அமைய வேண்டினாள்
படிக்க விரும்பிய அவளை
பெற்றோர் தடுத்தனர்
கோவிலுக்கு செல்வது தொடர்ந்தது
ஆசைப்பட்ட படி
அமையவில்லை திருமணம்
பிள்ளை ஒன்றுக்கு தாயாக்கி விட்டு
போய்விட்டான் புருஷன்
கூலி வேலை செய்து
குடும்பம் நடத்துகிறாள்
வேண்டுதல் எதுவும் நிறைவேறாமலே
முடிந்து விட்டது
முக்கால் பகுதி வாழ்வு
இறுதியில் இருந்தாலும்
நிற்கவில்லை கோவில் செல்வது
தெய்வம் கை விடாது
நம்பி செல்கிறாள் தொடர்ந்து