இதுவும்
இடறிய பள்ளங்கள்
கடந்த உயரங்கள்
எதுவும் மறக்கவில்லை
உதறிய கரங்கள்
உதவிய உள்ளங்கள்
அதுவும் மறக்கவில்லை
மறைந்த நண்பர்கள்
பிரிந்த காதலி
என்றும் மறப்பதில்லை
விடியலை நோக்கும் எண்ணங்கள்
கனவுகளாய் மறைந்து போகும்
கண்ணீரும் வற்றிபோகும்
நமக்குள் இருக்கும் மனிதனை
தேடி இந்த ஆண்டும்
கடந்து போகும்
புதியதாய் பிறப்போம்
நம்மை நாமறிய