ஆனந்தம் பெருக்கெடுக்கும்
பசுமைப் போர்வை மேல்
பூத்திட்ட பூக்களின் பாதை !
வளைந்த வானவில்லானது
விழிகளுக்கு விருந்தானது !
களைத்த நெஞ்சங்களுக்கு
களிப்பை அள்ளித்தரும் !
நொந்த உள்ளங்கள் கண்டால்
நொடிப் பொழுதில் மாறிடும் !
அவ்விடம் நாம் இருந்தால்
ஆனந்தம் பெருக்கெடுக்கும் !
அமைதியை தேடிடும் மனம்
அடைந்தால் பாடிடும் கானம் !
பழனி குமார்