எசப்பாட்டு எவடி
அடி ஆரடி அவடிப் பொட்டப்புள்ள?
பொடி ஏனடிக் கூறடி மட்டப்புள்ள.!
கொடி நீயடி எங்கடி எட்டப்புள்ள?
வடிக் காட்டடி வாலடிக் கிட்டப்புள்ள.!
பாட்டுக்குப் பாட்டு எசப்பாட்டா?
பாடப் பாட நாங் கேட்டா.
மேட்டுக்கு மேடு ஏறுதடி
நாட்டத்தில் மனசு தேடுதடி.
குரலக் கேட்டாக் குமரியடி.
உருளுது புரளுது ஆசையடி.
வெடலப்புள்ள வேண்டான்டி.
வீணா நெஞ்சு அலையுதடி.
கத்தாழங் காட்டுக்குள்ளே
சித்தாரக் கள்ளி எவா?
கொத்தோடு முள்ளுத்தச்சா
அத்தான் கண்ணும் நோகாதா?
ஆசையும் ஊறிக் கூடுதடி
அதுவும் மீறிப் பாடுதடி.
பாட்டுக்குப் பாட்டுப் பாட்டாடி?
பழகுவதெப்போக் காட்டாடி.
ஏங்குது மனசு தாங்கலயே!
நோங்குற வயசு காங்கலயே!
தேங்குன தண்ணி ஒடையிதடி!
வீங்குது எண்ணிக் கடையிதடி!
வெடலைங்க ரெண்டுப் பேரடி.
கடலை போட்டாப் பாக்குமடி.
மடலுக்குப்பின்னே ஊரடி
மறைஞ்சுமிருந்தும் பேசுமடி.
வாடிக் கள்ளி முன்னாடி!
வரிசை அள்ளி வாரேன்டி.
சோடிப் பாக்கலாம் சரியாடி?
கூடிக்கலக்கலாம் முறையாடி.
சுடல மாடன் துணயிருப்பான்
உடல ஒளிச்சதும் போதுமடி.
உள்ளம் இசஞ்சிச் சேந்திருச்சி.
கள்ளம் மறஞ்சி துணிஞ்சிருச்சி.
கொ.பெ.பி.அய்யா.