ஓ புத்தனே நான் தமிழன் பேசுகிறேன்
போதி மரப் புத்தனே..!
உன் ஞானம் எங்கே..??
பார்த்தாயா உன் புத்திரரை...???
சிங்கம் வழி வந்த வம்சம்...
அசிங்கம் செய்யும் மிருகங்களா?
ஐந்தறிவு மிருகங்களுக்குக் கூட
கொஞ்சமேனும் இரக்கம் இருக்குமே..!
உனைத் துதிக்கும் இனத்திடம்
எதுவும் இல்லையே புத்தா...!!!
நீ போதித்த பெளத்த தர்மம் இதுதானோ?
'பூமி நோகாமல் நட' என்றாயே..!
எறும்புகள் மிதிபடும் என்றுதானே...!!
எங்கள் அரும்புகளையெல்லாம்
கொத்துக் கொத்தாய்ச் சிதைத்தார்களே...!!!
அப்போது... எங்கே போனாய் புத்தா?
'தமிழனைக் வென்று வா...! கொன்று வா...!' என்று
நீதான்... வாழ்த்தி வழியனுப்பி வைத்தாயோ..?
உன் புத்திரரின் பாதகங்களை
பார்த்து ரசித்தாயோ...?
தமிழச்சிகளை சீரழிக்க
நீ சிரித்து மகிழ்ந்தாயோ...??
எத்தனை இசைப்பிரியாக்களில்
உன் இச்சை அடங்கும்...?
எத்தனை கிருஷாந்திகளில்
உன்னாசை முடங்கும்...??
கூறு புத்தா... கூறு!!!
எங்கள் அப்பாவிப் பெண்களை...
ஏன் கூறுபோட்டாய் கூறு?!
ஓ... புத்தனே...!
உன் விழிகளை அகலத் திற...!
உலகமே பார்க்கும்...
உன் புதல்வர்கள் செய்த
மகா கொடுமைகளைப் பார்!!!
கண்களை மூடிக்கொண்டு...
தியானமென்று நடிக்காதே...!
தலையில் கைவைத்து...
ஆனந்த சயனமெனத் தூங்காதே...!!
என்ன செய்யப்போகிறாய்...???
உன்னால் எதுவுமே முடியாது...!!!
எமக்கும் தெரியும்...!
மிக நன்றாகவே புரியும்!!
உன்னை மிதித்தேறி வந்துதான்
எம்மையும் மிதித்தார்கள்!!!
உன் தர்மம் அழித்தபின்னர்தான்
எம்மையும் அழித்தார்கள்!!
நீ வெறும் கல்லாவே இரு..!
தமிழர்களின் சதைத்துண்டங்களை
உனக்குப் படைத்து
தமிழனின் குருதியால்
அபிஷேகம் செய்வார்கள்!
எங்கள் பெண்களின் அலறல்கள்
உன் கற்சிலைக் காதுகளில்
ஞான சங்கீதமாய் ஒலிக்கும்!
எமக்குத் தெரியும்...!
முள்ளிவாய்காலின் அரசமரத்தடிக்கும்
ஒருநாள் உனை அழைத்து வருவார்கள்!
கண்ணைக் கட்டி உட்கார வைப்பார்கள்!!
சிதைந்துபோய் புதைந்துபோன...
எலும்புத் துண்டங்களின் மச்சைகளிலிருந்து...
எழுந்துவரும் பிணவாடை...
உனக்கும் பிடித்துப்போகும்!
உன் புதல்வர்கள்... உனக்கே போதிப்பார்கள்!
நீ மறுபடியும் ஞானம் பெறுவாய்...!!
கற்சிலையாய் இருக்கும் நீ
தமிழனைக் கொல்ல மட்டும்
சிங்களமாய் உருவெடுப்பாய்!!!
ஆனால்...
ஒன்று மட்டும் உறுதி...!!!
காலால் மிதிபடும் சிறுபுழு
தான் விடுபட...
மிதிக்கும் காலைக் கடிப்பதுபோல்,
உன் கொடுமை தாளாமல்...
மீண்டுமொரு கரிகாலன்
உனை எதிர்ப்பான்...!!!
*** *** *** *** *** *** *** *** *** *** ***
பிற்குறிப்பு / முக்கிய குறிப்பு : இங்கு பெளத்த சிங்கள வல்லாதிக்கத்தை முன்வைத்தே இக்கவிதை படைக்கப்பட்டுள்ளதே ஒழிய... அன்பினைப் போதிக்கும் மான்புமிகு பெளத்த மதத்தைக் குறித்தல்ல. நன்றி