நற்செய்தி

செய்தி நல்ல செய்தி
மனதுக்கு இனிய செய்தி
இதமான செய்தி
நன்மையான செய்தி
எத்தனை செயதிகள்
இனிமையும் இன்பமும்
ஒன்றே நல்குபவை
இச் செய்தி அளித்தது
நல்ல அருமையான் வாய்ப்பை
நினைக்கும் போதே மகிழ்ச்சி
என்ன என்று யோசிக்க
அது ஒரு வேலைக்கு ஆனஉத்தரவு
வாடும் குடும்பத்துக்கு
ஒரு அற்புதமான திறவுகோல்
வறுமையை மறந்து
இனிதாக வாழும் நேரம்
இன்னல்களை துறந்து
இங்கிதமாக இருக்க வேண்டிய தருணம்
சங்கடங்களை சமாளித்து
சமாளித்து பழகிய மனத்திற்கு
ஒரு இளைப்பாறும் நிலை
வெகு நெருக்கத்தில் வந்து விட்டது
வாழ்த்துகளுடன் நற்செய்தியை
பகிர்ந்து கொண்டு இன்புறுவது அல்லாமல்
வேறு ஒன்றும் அறியேன் பராபரமே

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (4-Nov-13, 10:33 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 810

மேலே