பஞ்சபூதங்கள்

இடி (இ)அடித்தது; மின்னல் வெட்டியது;
வானம் அழுதது - மழை நீர்.

செந்நிற நாக்கால் சுழட்டி உண்டது;
காய்ந்த விறகை - நெருப்பு

மென்மை, தண்மை, வன்மை பலவேடம்
புனையும் நவரசநாயகன் - காற்று.

குத்தி கிழித்தான் மானுட மைந்தன்;
நீரீந்தாள் நல்லன்னை - நிலமங்கை.

பரந்த மனமே மானுடத்தின்
தேவை என்றுணர்த்தும் - விரிந்த வானம்.

எழுதியவர் : கிருஷ்ணமுர்த்தி D (5-Nov-13, 12:30 pm)
பார்வை : 387

மேலே