அவசரபடாதிங்க
காலை நேர அவசரம்
மனதில் விழும் பதற்றம்!
பள்ளி அலுவலகம் போகவேண்டும்
நேரக் கடுங்காவலுக்குள்!
சாலைநெரிசல் முட்டல்மோதல்
எரிச்சலும் கோவமும் உச்சம்!
கவனம் தவறும் கன நேரம்தான்!
எதிர்பாரா தடுக்களில் விழுகின்றார்!
உடல் சிதைந்திடும் கோரமும் காண்கின்றோம்!
உயிர் பிரிந்திடும் அலறலும் கேட்கின்றோம்!
சில நேரம் சில குழந்தைகளும்!
நசுங்கிக்கிடக்கும் கோரம் ஐயோ!..
நமக்கு இப்படியெல்லாம் நிகழாது!
நாம் சரியாக இருக்கும் வரைதான்..
நட்புகளே! நேசங்களே!
அவசரமும் வேண்டாம்,
அவதியும் வேண்டாம்!
நேரத்தில் எழுவோம்!
நிதானமாக இருப்போம்!
அன்றைய வேலைகளை
நிதானமாக செய்வோம்
எல்லாம் நலமாகும்!