தலைவா படத்தில் நடித்த அனுபவம் - முன்னோட்டம்
அன்பார்ந்த நண்பர்களே,
உங்களில் சில பேர் தலைவா படத்தை பார்த்திருப்பீர்கள். அதில் அடியேனும் நான்கு காட்சியில் தோன்றியிருக்கிறேன். அப்படத்தின் நாற்பது சதவீத காட்சிகள் சிட்னியில் படமாக்கப்பட்டது. அப்போது நகைச்சுவை காட்சிக்காக பத்து பேர் வேண்டும் என்று என் நண்பரிடம் கேட்டிருக்கிறார்கள். நான் இங்கு ஐந்தாறு குறு நாடகங்களை மேடையேற்றியிருப்பதால், என்னிடம் அந்த நண்பர், என்னையும், என் நாடககுழுவை சார்ந்தவர்களையும் புகைப்படத்தை அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி, நானும் என் நாடக குழுவை சேர்ந்த சில நண்பர்களும் புகைப்படத்தை அனுப்பினோம். பின்னர் இயக்குனரை சந்தித்து அந்த படத்தில் நடிப்பதற்கு தேர்வானோம்.
நான் ஐந்தாறு நாட்கள் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருக்கிறேன். (அதில் இரண்டு நாட்கள் அலுவலக விடுமுறை வேறு). கடைசியில் நான் திரையில் தோன்றுவது என்னமோ வெறும் இரண்டு நிமிடங்கள் தான். அந்த படப்பிடிப்பில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை தான் நான் இங்கு எழுதலாம் என்று இருக்கிறேன்.
--- அனுபவங்கள் தொடரும்
பின் குறிப்பு: நடனப்பள்ளி காட்சியில், நான் அமலபாலின் இடது பக்கம் நின்று நடனம் கற்றுக்கொள்வேன்.