மகாத்மா காந்தி யங் இந்தியாவில் எழுதியது

"தென் ஆப்பிரிக்காவிலே இஸ்லாம் வந்துவிடுமோ என்று ஐரோப்பியர்கள் பயப்படுகிறார்கள் என்று யாரோ சொன்னார்கள். ஸ்பெயினுக்கு நாகரீகத்தக் கொடுத்தது இஸ்லாம். அந்த ஒளியை மொரொக்காவுக்கும் பாய்ச்சியது. இந்த உலகம் முழுவதும் சகோதரத்துவம் என்ற வேதத்தைப் போதித்தது. சகோதரத்துவம் என்பது ஒரு பாவமாக இருக்கும் பட்சம் ஐரோப்பியர் பயப்படலாம்.

"இந்த உலகத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் வீற்றிருக்கின்ற ஒரு தலைச்சிறந்த மனிதரைப் பற்றி அறிந்துக் கொள்ள நான் ஆசைப்பட்டேன். இஸ்லாத்திற்கு உரிய இடத்தை இந்த உலகில் வாங்கிக் கொடுத்தது வாள் அல்ல என்பதில் நான் மிகத் தெளிவாக உள்ளேன். அந்த இடத்தை இஸ்லாம் பெற்றதற்கு காரணம் முஹம்மது நபியின் எளிமை, சுயநலம் கருதாமை, எந்தச் சூழ்நிலையிலும் வாக்குத் தவறாமை, தன் நண்பர்களிடமும் தன்னைப் பின்பற்றியவர்களிடமும் கொண்டிருந்த ஆழமான உறவு, அவருடைய துணிச்சல், ஈடு இணையற்ற கடவுள் நம்பிக்கை மற்றும் அவர் கொண்டு வந்த செய்தி.

"இவைதான் எல்லாத் தடைகளையும் மீறி இஸ்லாத்தை முன்னுக்கு எடுத்துச் சென்றதே ஒழிய, வாளல்ல. (அவருடைய வாழ்க்கை வரலாறு பற்றிய) இரண்டாவது அத்தியாயத்தை நான் மூடிய போது அந்த உயர்ந்த வாழ்வு பற்றி மேலும் படிப்பதற்கு ஏதுமில்லையே என்று வருந்தினேன்.

தேசப்பிதாவுக்கு தெளிவாகப் புரிந்த ஓர் உண்மை பேரர்களுக்கும் கொள்ளுப் பேரர்களுக்கும் புரியாதது ஏன்? உலகப் புகழ் பெற்ற வரலாற்று அறிஞரான கிப்பன் கூட "உலகத்தில் உள்ள மதங்களையெல்லாம் வாள் கொண்டு அழிப்பதுதான் முகம்மதியர்களுடைய கடமையாக இருந்தது என்று ஒரு மோசமானக் குற்றச்சாட்டு அறியாமையிலும் தப்பெண்ணத்திலும் சொல்லப்பட்டது" என்று கூறுகிறார்.





நன்றி

நாகூர் ரூமி.

எழுதியவர் : muhammadghouse (7-Nov-13, 11:54 pm)
பார்வை : 217

சிறந்த கட்டுரைகள்

மேலே