Unnai Enni

உன்னை எண்ணி...


பளிங்காய் மின்னிடும் நெற்றி;

மின்காந்த மீன்விழிகள்;

தேனூறிய செவ்விதழ்கள்;

கடிக்கச் சொல்லும் கன்னங்கள்;

அணி ஏங்கிடும் காதுகள்;

அழகே குவிந்த கழுத்து;

வைரமும் தோற்றிட்ட பற்கள்;

கூந்தலெனும் தோகை;

அதில் வாடா மலர் வாகை;



வனியே, வருணிக்க வார்த்தைகள் இல்லையடி;

ஒருமிக்கா சிந்தையில் தொல்லையடி;



கொடும்பாவியாய் கொல்கிறாய்;

கொஞ்சலும் சொல்லிச் செல்கிறாய்;



ஏஞ்சல் நீயடி,

ஏங்குகிறேன் நானடி.

இனி காதல் கூறும் நாட்கள் தோறும்...



ஆசைக்கு பணி-யவனாய்

என்றும் உந்தன் இனியவனாய்.....



AGALEX

எழுதியவர் : pragasthan (7-Nov-13, 10:30 pm)
பார்வை : 113

மேலே