காத்திருப்பாய் காதலியே
காத்திருப்பாய் காதலியே
காலம் கனியும் கண்மணியே
கனவுகள் எல்லாம் நிஜமாய்மாறும்
நாளை என்பது நம்வசமாகும் ..........
நமது உணர்வை இறைவன் உணர்வான்
பிரிந்த இதயத்தின் துன்பம் அறிவான்
அழுகின்ற மனதிற்கு ஆறுதல் சொல்லி
அவனே நாளை இன்பம் தருவான் .........
பிரிந்த கைகள் மீண்டும் இணையும்
முறிந்த காதல் மீண்டும் மலரும்
மூன்று முடிச்சே நம்மை சேர்க்கும்
முடிவில் எல்லாம் நம்மிடம் தோற்கும் ........
உடல்கள் இரண்டும் பிரியும் காலம்
உணர்வுகள் என்றும் ஒட்டியே இருக்கும்
உனது சுவாசமாய் நானே இருப்பேன்
எனது சுவாசமாய் நீயும் இருப்பாய் ............
உணர்தலும் புரிதலும் காதல் ஆகும்
பிரிதல் என்பது காதலில் வேகம்
சரித்திரம் புரிவது சவாலகல்தானே
இதில் சாதல் என்பது தோல்விதானே .......
எதிர்ப்புகள் இல்லா காதல் இல்லை
தொல்லைகள்தானே காதலின் எல்லை
நம்மை நாமே புரிந்த பின்பு
மூன்றாம் நபரால் ஏது வம்பு ........
உண்மை காதல் தோற்றது இல்லை
உணர்ந்து வாழ்தலே நம்பிக்கையின் எல்லை
நம்பிக்கை மட்டுமே நம்மை சேர்க்கும்
நாளைய வாழ்வு இனிதாய் பூக்கும் ...........