பேசும் கொலுசு

====தாயவளுக்கு ====
தூக்கம் கலைந்திட குழந்தை
எழுவதை காட்டி கொடுக்கும்
கண்ணாடியாய் அருகில்தான்
இருக்கிறாள்என்பதை உணர்த்தும்
தன் குழந்தையின்
``````சலங்கைகொலுசு ``````

====குழந்தைக்கு====
பூச்சிப்பொட்டுக்கள் தீண்டாமல்
காத்திடும் பாதுகவலனாய்
ஆசை நடைபழக ஆர்வம்
கூட்டிடும் தோழமையாய்
``````முத்துக்கொலுசு ``````

====மங்கையவளுக்கு====
மாதவிலக்கில் மங்கிப்போகாமல்
புத்துணர்ச்சி தந்திடும்
நிவாரணியாய் கால்வழிசெல்லும்
மூளை நரம்பினால் மூளையின்
செயல்களை கட்டுப்படுத்தும்
``````வெள்ளிக்கொலுசு ``````

====காதலனுக்கு====
தன் ஆருயிர் காதலியின்
மென்மை மனதை மயிலிறகால்
வருடிட காத்திருக்கும் அவனுக்கு
வருகை காட்டிகொடுக்கும்
``````முத்துக்கொலுசு ``````

===கணவனுக்கு====
கட்டியவளின் குணமும்
மனமும் அவளின்
கோவமும் ஆசையும்
அவளுக்கு முன்பே
காட்டிகொடுக்கும் களவாணியாய்
``````இலைகொலுசு``````

...கவியாழினி...

எழுதியவர் : கவியாழினி (8-Nov-13, 10:26 am)
பார்வை : 3821

மேலே