காதலித்துப்பார்
கைபேசியில் காதலியின்
முகம் தெரியும்...!
தினமும் "எஸ்எம்எஸ்"களால்
"இன்பொக்ஸ்" நிறையும்
செல்லம் கொஞ்சியே..
மெல்ல உன் காசெல்லாம்
கரையும்....!
சில வேளைகளில்..
தூக்கத்தில்கூட
"கலோ" செல்லம் என்பாய்...!
ஓர்நாள் பேசாது போனால்கூட
உலகே அழிந்தது போலாகும்
சுற்றிவர இருப்பவரை மறப்பாய்..
பற்றியிருப்பது தொலைபேசி
என்றாலும்....
பசக்...பசக்கென. முத்தங்களிடுவாய்
உனக்குப்பிடிக்காத ரிங்ரோனைக்கூட,
அவளிற்குப் பிடித்ததால் வைத்திருப்பாய்..
இதுவரை பேணிவந்த பொய்க் கலை
மறப்பாய்..
உண்மை மட்டுமே உனதுதடு பேசும்
அவளோ பொய்களை மட்டுமே
புளுகுவாள்..!
இருக்குமிடம் "பார்" என்றால்கூட
சொல்வாய்-அவளோ
இருக்குமிடம் "பீச்" ஆக இருக்கும்
உண்மை பேசுவாள்...
வீட்டை இருக்கிறன்...
ஒரே தலைவலியடி என..
"டீ"..போட்டுச் சிணுங்குவாள்...
நீயோ.."டீயைக்" கவனித்திருக்கமாட்டாய்..தலை வலியை மட்டுமே செவி நுகர்ந்திருப்பாய்
தெரிந்த வைத்தியம் மருந்தெல்லாம்
சொல்வாய்...
நேர்த்தியும் வைப்பாய்-ஏதோ
இடுப்பு வலி எடுத்த கணக்காய்
மொட்டையடித்து நீ செல்ல
அதைத் தடவி...
நெகிழ்ந்துபோவதாய் அவள்
நடிப்பாள்...!
சில நாட்களில்..
அழுதபடி வருவாள்..
வீட்டை மாப்பிளை பார்க்கினம்...
என்னாலை என்ன செய்ய..
அழுதபடியே உரைப்பாள்..
நீயோ காதல் வசனம் சொல்லி
கண்கலங்கியபடி வாழ்த்துச் சொல்வாய்..!
இதுவரை பழகிப் பார்த்தவர்களில்
ஒருவர்தான் மாப்பிள்ளையென..,
பாவம் நீ அறிந்திருக்கமாட்டாய்..
அவள் நினைவில் தலையைப் பிய்த்துக்
கொள்ளத்தோன்றும்..
உனக்கு ஒரே ஒரு ஆறுதல்...
மொட்டை போட்டது..
தலை சொறிய ரொம்பச் சுகம்...!