படித்துச் சொல்லு அன்பே

படித்துச் சொல்லு அன்பே
பதியுங் கருத்தாமே!
தடித்தால் ஆகுங்கண்ணே
தர்பார் விமர்சனமே!
கருத்தா விமர்சனமா அன்பே
கவனம் கொள்வாயே!
இரண்டும் வெவ்வேற் கண்ணே
விவரந் தெளிவாயே!
வாழ்த்தி வளர்பபது அன்பே
வரையும் கருத்தாமே!
ஆழ்த்தி உள்ளேக் கண்ணே
ஆய்வது விமர்சனமே!
இனிமை மொழிந்து அன்பே
ஏற்றுதல் கருத்தாமே!
துணிமைக் கொண்டுக் கண்ணே
துலக்குதல் விமர்சனமே!
போதுங் கனிமை அன்பே
போற்றுங் கருத்தாமே!
வாதந் தேறுங் கண்ணே
வல்லமை விமர்சனமே!
இயல்பாம் நயமாம் அன்பே
இடிப்பதுக் கருத்தாமே!
முயன்றும் பிள்ந்துங் கண்ணே
முடிப்பது விமர்சனமே!
நேருரைச் செய்தும் அன்பே
நிறைவது கருத்தாமே.
போருரை நேருங் கண்ணே
தேறுரை விமர்சனமே!
சுருக்கஞ் சொல்லும் அன்பே
சுகமேக் கருத்தாமே!
சருக்க மாறுங் கண்ணே
சமராம் விமர்சனமே!
சாதா அறிவே அன்பே
போதுங் கருத்தாமே!
ஆதாரந்தான் கண்ணே
அறிவாம் விமர்சனமே!
கவியின் உயிரை அன்பே
உணருதல் கருத்தாமே!
துடிப்பதைக்கற்றுக்கண்ணே
தூய்ததறி விமர்சனமே!
நிராயுதம் நின்றே அன்பே
நிரவல் கருத்தாமே!
திறாயுதங் கொண்டுக் கண்ணே
தீர்வது விமர்சனமே!
படைப்பைப் படித்து
பதமது முடித்து
உடையது உணர்ந்து
உதவுவது கருத்து.
அதற்கும் மேலே
ஆய்வது முனைவே.
அறிவின் செறிவே
ஆகும் விமர்சனமே!
எதுவானாலும்
பொதுவே நலமாம்.
எதுவும் தீர்ந்து
விளைவும் சுபமாம்.
கொ.பெ.பி.அய்யா.