தாய் மனசு
ஐயோ! கொடுத்த பாலெல்லாம்
ரத்தமாக ஓடுகிறதே என்று
கதறி அழுகிறாள் ஒரு தாய் சாலையில்
அடிபட்டு கிடந்த அவனைப் பார்த்து
"யாரம்மா இது உன் மகனா"
என கேட்ட ஒருவரிடம்
தலையை ஆட்டிக்கொண்டே
யாராக இருந்தால் என்ன
நானும் தாய் தானே!
அந்த தாய் இந்த மகனை பார்த்தால்
என்ன பாடுபடும் அவள் உள்ளம்
என உளறிக்கொண்டே நடக்கிறாள்
தன் மகனை வெகு நாட்களாக
காணாமல் தவிக்கும் இந்த தாய்!