என் குழந்தையிடம் பாடம் படிக்கிறேன்…

குழந்தை வரைந்ததும்…. வரைந்ததும்
இந்த பறவைகள் பறந்து விட்டால்
எப்போது முடிப்பது ஓவியத்தை!

************************************************
பள்ளிக்குச் சென்றுள்ளான்….
எனக்கு என்ன படித்து வருவானென்று
தெரியவில்லை!

************************
குழந்தை விளையாடுவதை
வேடிக்கை பார்க்கையில்,
பதட்டத்தில் வரும்
என் உடல் அசைவுகளை…
நான் விளையாடுவதாய்
வேடிக்கை பார்க்கிறது குழந்தை.

***********************************************
பாட்டி தாத்தா
அப்பா அம்மா என
வீட்டுப் பாடத்திற்கும்
காவலாளிகள்…

***********************
குழந்தை எனக்கு
பாடம் நடத்தும் போது,
என் மீதான கண்டிப்பில் தெரிகிறது…
அவன் ஆசிரியையின்
வன்முறைகள்..
************************

எழுதியவர் : ஆண்டன் பெனி (8-Nov-13, 7:58 pm)
பார்வை : 84

மேலே