அவளும் நானும்

பகல் முழுதும்
பல கண்கள் உனையே மொய்ப்பதால்,
இரவுகளில் மட்டுமே
இசைகிறது நம் அன்பு...

என் ஏக்கம் உன் அலைபேசிக்கும்,
உன் ஏக்கம் என் அலைபேசிக்கும்,
பரிட்சயம்....

சில சதுர அடிகளே
ஆன,சிற்றறைதான்,
ஆனாலும்,
பொங்கி பெருகுமென் அன்பை
லாவகமாய் பூட்டிவிடுகிறது,
உன்னறையின் தாழ்.

"புது கவிதைகள்
எழுதத் தெரிந்த மரபுக்கவிதை"
என்றுதான் கவி பாட முடியுமுனை.

என் மடிகணினியில்,
மணிக்கணக்கில்,
மடங்காமல்,கசங்காமல்,
உன்னுருவம்....

அலார சப்ததிற்க்கே
இசையாத செவிகள்,
மில்லிசையால் மென்மேனி
கனவில் வர
அதிர்ந்தெழுகிறது.

என் தேசத்து சேவல்கள்
கொக்கரிப்பது கூட
உன் பெயரைத்தான்.

என் மரணத்தின்
விளிம்பு எங்கு முடியுமென்று
அறியா,
ஆனால் அது உன் மடிகளில்
என்றால்,
இக்கணமே மரணிக்க மனசு விழைகிறது.

நீ சாலையில்
நடந்தால்,
உன்னை எல்லோரும் அறிவார்கள்.
ஆனால்,
என் சாலையின் திசையெல்லாம் உன்னை மட்டுமே அறியும்...

குறும்பாய் ஒரு ஆசை,
உன் பெயர் வைத்த
சாலையொன்றில்,
தொலைந்து போகும் குழந்தையாக....
விரல் பிடித்து மீட்டெடுப்பாய்,
நீ என்ற ஆசையில்....

எழுதியவர் : துளசி வேந்தன் (9-Nov-13, 12:24 pm)
சேர்த்தது : Baskaran Kannan
Tanglish : avalum naanum
பார்வை : 59

மேலே