ஆண்டுகள் பலபல வாழியவே

வாழ்வின் முடிவில் முதியவர்
வாழ்ந்த களைப்பை மறந்திட்டு
நடந்திட இயலா நிலையிலும்
உடைந்திட்ட உள்ளம் ஆகாமல்
வாகனப் பயணம் வாழ்க்கையில் !
முடியாத நிலையென முடங்காமல்
வடியும் பாசமுள்ள இதயமுடன்
விழுதின் விழுதினை மடியினிலே
ஆனந்தம் பெருகிட அமர்த்திட்டு
கடமையை ஆற்றிடும் பெரியவர் !
சுயமாக நடப்பதே சுமையானாலும்
சுகமாக மழலையை சுமந்திடும்
அகத்தினில் அன்பு நிறைந்தவர்
அகிலத்தில் அரிதான மனிதரவர்
ஆண்டுகள் பலபல வாழியவே !
பழனி குமார்