உனக்காய் நான் எழுதும் முதல்கவிதை

அடி தோழி...!
உனக்கான என் முதல் கவிதையை எழுத நினைத்து ஆர்வமாய் பேனாவை சுழற்றுகிறேன் ஆனால் காகிதத்தில் ஓர் வார்த்தையும் இல்லை. மாறாக அனைத்தும் என் கண்ணில் நீராய் வழிகிறது...!
உனக்கான இந்த பரிசை அனுப்பிவைக்கிறேன் பெற்றுக்கொள் அதனை மழைத்துளியாக..!