எப்படி இருக்க நீ
வீட்டுல பேசிட்டு
நல்ல சேதி சொல்லுறேன்னு சொன்ன;
இப்போ இருக்கியா இல்லையான்னு கூட
தெரியாத மாதிரி இருக்கியே??
எப்படி இருக்குற நீ??
ஒருநாள் பேசாட்டியும்
ஒருவாரம் கவலை படுவ;
இப்போ அரைவருஷம் ஆகியும்
அமைதியா இருக்கியே??
எப்படி இருக்குற நீ??
உன் மூச்சை விட அதிகமா
என்னை தானே ஸ்வாசிச்ச;
இப்போ முகத்தைகூட காட்டாம
மூடி மறைக்கறியே டி??
எப்படி இருக்குற நீ?
காதல் செஞ்ச நெஞ்சு
என்ன கசக்கி பிழியுதடி;
என் காதலையும் காகிதமா
கசக்கி எரிஞ்சுடியா??
எப்படி இருக்க நீ??
காத்திருன்னு ஒரு வார்த்தை சொல்லு,
ஆயுசுக்கும் காத்திருப்பேன்;
ஆனா
இப்படி அமைதியாவே இருந்து
என்ன அரலூசு ஆக்கிட்டியே??
எப்படி இருக்க நீ??
கடைசியா ஒன்னு சொல்லுறேன்!
நல்லா கேட்டுக்கோ!
நம்ம காதலை நிரூபிச்சுக் காட்டு!
பத்தோட பதினொன்னு,
அத்தோட நாஒன்னுன்னு
நீயும் இருந்துடாத!!
இப்பவும் எனக்கு தெரிஞ்சுகவேண்டியது,
எப்படி இருக்க நீ??
(என் அன்பு சகோதரனின் கண்ணீருக்காக)