குமரி அலைகள் குமரிப் பையன் கவின் சாரலன்
நான் எனது சிந்தனை அலைகள் பதிவில்
புள்ளிகள் பற்றி நான் எழுப்பிய கேள்விகளுக்கு
அருமை கவி நண்பர் குமரிப் பையன்
மிக அற்புதமாக பதில் விளக்கம் தந்திருந்தார் .
இங்கே உங்களுக்காக :
-----------கவின் சாரலன்
எனது கேள்விகள் :
1.புள்ளிகள் சரியான நடுநிலையிலான
ஆரோக்கியமான இலக்கிய மதிப்பீடா ?
2. எண் கொண்டு எழுத்தினை மதிப்பீடு
செய்வது இலக்கியத்தின் சரியான
அளவுகோலா ?
3. நற் கவிதைகள் பல தந்த KPP அய்யா
போன்ற நற் கவிஞர்கள் புள்ளிகள்
வேண்டாம் என்று விலகிச் செல்வது
ஏன் ?
அய்யாவுக்கு வணக்கங்கள் பல...!
1.அப்படி உறுதியாக சொல்ல முடியாது.
2.நிச்சயமாக இல்லை.
3.தேர்வு புள்ளிகள் கிடைக்கும் போது அந்த குறிப்பிட்ட படைப்புகள் இறுதி தேர்வு பட்டியலில் இடம் பிடிக்கிறது. அதன் பிறகு பரிசிற்கான பட்டியலில் சேர்ந்து பரிசுகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. அறிஞர் KPP அய்யா போன்றவர்கள் நிறைய படைப்புகள் பதித்ததுடன் பரிசுகளையும் வென்று தரத்தை நிருபித்து விட்டார்கள். தற்போது அவர்கள் தேர்வு புள்ளிகள் வேண்டாம் என்று சொல்வது தங்களது படைப்புகள் தரம் இல்லை என்று பொருள் அல்ல. மற்ற படைப்பாளிகளின் படைப்புகள் தேர்வு பட்டியலில் இடம்பெற்று பரிசுகளை வெல்லட்டும் என்ற உயர்ந்த எண்ணமே காரணம் என்று நான் எண்ணுகிறேன்.
நானும், தேர்வு புள்ளிகளுக்கு ஆசைப்பட்டு எனது பதிவுகள் "கிராமத்துக்கு போகலாமடி" மற்றும் "ஏன் பிறந்தோம் ஈழத்தில்..?" என்ற இரு பதிவுகளுக்கு நண்பர்கள் வட்டத்திற்கு தனி விடுக்கை மூலம் செய்தி அனுப்பி பார்வை இட சொன்னேன். அனைவரும் வருகை தந்து கருத்தும் புள்ளிகளும் இட்டனர். ஆனால் அதன் பின்னர்தான் எனக்கு ஞானோதயம் வந்தது.. நமது படைப்பை எழுத்து நேயர்கள் விரும்பி படித்து கருத்தும் தேர்வும் போட வேண்டுமே தவிர நாமாக அழைத்து பார்வையிட வைத்தால் உண்மையான தரம் அறிய முடியாது என்று புரிந்தது. அதன் பிறகு என் படைப்புகளுக்கு தனி விடுக்கை விடுவது நிறுத்திவிட்டேன்.!
அதற்காக நான் மற்றவர்களின் பதிவுகளை பார்வையிட்டு கருத்து, தேர்வு இடுவதில் ஒரு குறைவும் இல்லை..! நான் புதியவர்களை அதிகம் உற்சாக படுத்துகிறேன். ஆரம்பத்தில் பதிவுகள் எப்படி இருந்தாலும் எழுதி வரும் போது அவர்களிலும் யாராவது சிறந்த பதிவுகள் தர முடியும் என்ற நம்பிக்கையில் ..!
இது அனைத்தும் எனது தனிப்பட்ட எண்ணம்தானே தவிர வேறு யாரையும் குறிப்பிட்டு அல்ல என்பதையும் தாங்களுக்கு தெரிவிக்கிறேன்.
என்றும் உங்கள்
நட்புடன் குமரி.