மினி பேருந்தும் மினி பயணமும்

ராமாபுரம் மெயின் ரோட்டில் ஒரு மினி பேருந்து

கிடுகிடு வென 30 பேர் பஸ்ஸில் ஏறினர்.

எல்லோர் முகத்திலும் சந்தோஷம்.

'ஏண்டா, இப்ப மினி பஸ், அப்புறம் 17G, அப்புறம் திரும்பவும் மினி பஸ். அப்புறம் நம்ப பொழப்பு எப்படி ஓடும்'. ஆட்டோ காரர்களின் மன வெளிப்பாடுகள்.

மனிதர்களை ஏற்றிக்கொண்டு பஸ் புறப்பட்டது.
'எங்க போவணும்'
'அரச மரத்தடி'
'கல்லூரி சாலை ஒன்னு கொடுங்க'
'அது எங்க இருக்கு'
'ஏங்க, என்னங்க கண்டக்டர் நீங்க, நிறுத்தம் எல்லாம் உங்களுக்குத் தான் தெரியனும்'.
'சார் நான் புதுசு சார்'

பஸ் சுட்டுகாட்டுக்கு அருகில் ஸ்டேஜிக்காக நிறுத்தப்பட்டிருந்தது.

'சார் டிக்கட் வாங்கறவங்கலெம் சீக்கிரம் வாங்குங்க'
பஸ் மைக்கேல் கார்டன் அருகில் வந்திருந்தது.
'புள்ளயார் கோயில் நிக்குமா சார்'
'ரெண்டு வீட்டுக்கு ஒரு வீடு நிக்கும்'

'என்ன சார் செய்யறது, இது தான் பொழப்பு, ஆளாளுக்கு வீட்டுக்கு வீடு நிறுத்த சொல்றாங்க. ஆனா எங்களுக்கு 32 டிரிப்பு அடிக்கணும் சார். இன்னைக்கு இது தான் 18வது டிரிப்பு. அதிக பட்சம் 22 அல்லது 23 தான் முடியும். என்னா, கொஞ்சம் திட்டுவாங்க, வாங்கிக்க வேண்டியது தான்.

டிரிப் ஷீட்டில் 32 என்று எழுதி வட்டம் இடப் பட்டிருந்தது.

பயணம் சிலருக்கு சுகமாகவும், சிலருக்கு சுமையாகவும் மாறிவிடுகிறது. ஆனாலும் பயணம் மட்டும் தொடர்கிறது.

எழுதியவர் : அரிஷ்டநேமி (10-Nov-13, 6:48 pm)
சேர்த்தது : அரிஷ்டநேமி
பார்வை : 201

சிறந்த கட்டுரைகள்

மேலே