திருட்டு நிபுணர்கள்
திருட்டு நிபுணர்கள்
மருத்துவர்கள் பொறியாளர்கள்
பேராசிரியர்கள்
இவர்களில் மட்ட்டுமா
சிறப்பு நிபுணர்கள்?
ஓடும் வேகத்தில் தங்கச்
சங்கிலியைப் பறித்தல்
இருசக்கர வண்டிகள், கார்கள்
லாரிகள் வேன்கள்
ஆட்டோ ரிக் ஷாக்கள்
ஆகியவற்றைக்ன்களவாடல்.
கடைகளில் பூட்டை
உடைத்துத் திருடுவது,
ஊருக்குச் சென்றவர்கள் வீட்டில்
நுழைந்து, உண்டு, உறங்கி
நகைகளையும் வெள்ளிப்
பாத்திரங்களையும் அள்ளிச்
செல்வது; வங்கி லாக்கரை
ஏடிஎம்ஐ உடைத்துத் திருட
முயற்சிப்பது; மடிக்கணினி
மட்டும் திருடும் நிபுணத்துவம்.
இன்னும் எத்தனையோ துறைகள்
திருடர்களுக்கு.
காவல் துறைக்கும் தெரியாத
துறைகள் எத்தனையோ?
பலதுறை வல்லுநர்கள் திருடர்களில்
எந்தப் பல்கலைக் கழகம்
வழங்கப் போகிறது இவர்களுக்கெல்லாம்
கவுரவ ’டாக்டர்’ பட்டம்?