பூச்சிகள் ===== மெய்யன் நடராஜ்

மின்வெட்டு நாட்களிலும் பிரகாசிக்கும்
தடையில்லா வெளிச்சப் பூக்கள்.
சிறகடிக்கும் மின்மினிப் பூச்சிகள்!

பூக்கள் விடும்
வாலில்லாப் பட்டங்கள்.
வண்ணத்துப் பூச்சிகள்!

பயமில்லா வீட்டுக்காரியை
நடுங்க வைக்கும் தைரியசாலிகள்.
கரப்பான் பூச்சிகள்!

எந்தக் குளிரிலும்
போர்த்திக் கொள்வதில்லை
கம்பளிப் பூச்சிகள்!

ஆயுதமில்லாப் படை
எதிரியை கொல்லாமல் விட்டதில்லை.
நூலாம்படை! (எட்டுக்கால் பூச்சிகள்)

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (11-Nov-13, 2:17 am)
பார்வை : 77

மேலே