தனி தமிழ் ஈழம் வேண்டும்

மொழி, இனம் பாராமல் - காந்தியின்
வழியினம் நின்றதால் - பாரதம்
விடுதலைப் பெற்றது.
தனி தமிழ் ஈழத்தில் - சிங்களனின்
தலை விரிக்கோலத்தில் - தமிழினம்
தத்தளித்து வருகிறது.
வாழ்க்கையில் போராட்டம்
இருக்கத்தான் செய்யும் - ஆனால்
போராட்டமே வாழ்க்கை என்றால்
போர்க்களம் தேவையில்லையே.
வாளேந்தி போர்க்களம் நில்லாத
வஞ்சக சிங்களன் வாழலாகுமோ?
இடி,மின்னல்,புயல், சுனாமி,
இயற்கையால் விளைவது - ஆனால்
இதயமே இல்லாத சிங்களனின்
இனவெறியில் தமிழினம் அழிவது நியாயமோ?
ஈழத் தமிழினம் ஈனப்பட்டு
ஈன பிறவியாய் சிங்களனின்
ஈனச் செயலில் வதைப்படுவது நியாயமோ?
உரிமைக்காகப் போராடும் ஈழத் தமிழனுக்குத்
தனி தமிழ் ஈழம் பெற்றுத் தர
தலை நிமிர்ந்துப் போராடும்
தன்னிகரற்ற மகாத்மா எவரோ?
ஈழத்தில் தனிதமிழ் ஈழம் வேண்டும்.-நெஞ்சத்தின்
ஆழத்தில் எத்தமிழன் இதற்குப் போராடப்போகிறான்?
தமிழனே - அதோ - யாழ்ப்பாணத் தமிழனின்
யாசகங்கள் ஊடகங்கள் வழியே கேட்கின்றாயே
போதும் சிங்களனின் நாடகங்கள். - எழுவாய்
இன்னொரு சுதந்திரம் ஈழத்தில் கிடைக்கட்டும்

எழுதியவர் : சு. சங்கு சுப்ரமணியன் (11-Nov-13, 6:09 pm)
சேர்த்தது : s.sankusubramanian
பார்வை : 91

மேலே