மொய் முகங்கள் =====மெய்யன் நடராஜ்

சுற்றம் சூழ குடும்ப சகிதம் என
அச்சடித்துக் கொண்ட
அழைப்பிதழ் வாசகங்களை
காயப் படுத்தக்
கூடாதென்பதற்காக
கௌரவமாக
அஞ்சல் உறையில்
வைக்கின்ற தொகையின்
எண்ணிக்கையிலும் அதிகமான
எண்ணிக்கைகளுடன்
பந்தியை நிறைவாக்கும்
தூரத்து உறவுகளும்,

மாதக் கடைசி என்பதை
மறைமுகமாய்
சுட்டிக்காட்ட
சமூகமளிக்க முடியாத
சங்கோஜத்தை
வருத்தங்களாக்கி நகரும்
அயல்வாசிகளும்,

ஒவ்வொரு தேவைகளிலும்
முதல் மரியாதைக் கேட்டு
அவமானப் பட்டுப்போகும்
சில செல்லாக் காசுகளும்

கஷ்டங்களுக்கு
மத்தியிலும்
கரையேற்றப்படுகின்ற
கண்ணீர் நதிகளை
தண்ணீர் நதிகளினால் (மது)
மூழ்கடிப்பதற்காகவே
பெருக்கெடுக்கும்
சட்டைகளில் பையே
வைத்துக்கொள்ளா சில
வெருங்கைகளும்

எங்காவது எப்போதாவது
அழைப்பிதழ்களுக்கு
முகவரி எழுத நேருகையில்
வந்துபோவது
தவிர்க்க முடியாதவைகளில்
ஒன்றாகிறது.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (11-Nov-13, 10:35 pm)
பார்வை : 102

மேலே