அனாதைகளா நாங்கள்
தவறாக பிறந்தோமா
தவறுதான் பிறந்ததா
தெரியவில்லை !
அன்னை தந்தைதான்
அகிலத்தில் யாரென்று
தெரியவில்லை !
அன்பும் பாசமும் என்றால்
அரிச்சுவடியும் எங்களுக்கு
தெரியவில்லை !
எந்நாளும் எங்களின் பெயரை
எவரும் சொல்லாதது ஏனென்று
தெரியவில்லை !
ஏங்கிடும் நாளும் எங்களுக்கு
ஏக்கத்தின் காரணங்களோ
தெரியவில்லை !
பிள்ளைகள் இல்லாத பலரும்
பிள்ளையென கருதாது ஏனோ
தெரியவில்லை !
உலகில் பிறந்தது பாவமா
உய்த்திட நினைப்பதும் தவறா
தெரியவில்லை !
அனைவரும் அழைப்பது எங்களை
அனாதைகள் என்றே ஏனென்று
தெரியவில்லை !
எங்களுக்கும் பெயர் சூட்டி
எங்களை மகிழ்விக்காதாது ஏனென
தெரியவில்லை !
தத்தெடுக்க நினைப்பவர்களும்
தயங்கியே நிற்பதன் காரணமும்
தெரியவில்லை !
வந்திட்டோம் உலகிற்கு நாங்களும்
வாழ்வளிப்போர் யாரென என்றுதான்
தெரியவில்லை !
யாசிக்கிறோம் நாங்களும் உங்களை
சுவாசிக்க வழியொன்று சொல்வீரே !
விதியென்று எங்களை ஒதுக்காதீர்
வீதியில் நிற்கிறோம் நாங்களும் !
திட்டங்கள் தீட்டிடும் அரசுகளே
தீண்டாதவர் அல்லரே நாங்களும் !
தவறே செய்யாத எங்களையும்
தண்டிக்க நினைப்பதுவும் ஏனோ !
சிந்திப்பீர் வாசிக்கும் அனைவரும்
சிந்தையில் தோன்றுவதை செப்பிடுக !
அனைவரையும் வேண்டுகிறோம் நாங்கள்
அனாதைகள் எனும்சொல் மறைய வேண்டும் !
உங்களில் ஒருவரே நாங்கள் என்று
உலகோர்க்கு புரிந்தால் நன்றே அதுவும் !
பழனி குமார்