தாஜ்மஹால்

காதல் நெஞ்சின் காவியமா-இல்லை
கண்ணில் வடித்த ஓவியமா?

அன்பு காதலியின் கல்லறையா-இல்லை
வாடும் நெஞ்சின் கருவறையா?

மறைந்த மும்தாஜின் அரங்கமா-இல்லை
ஆன்மா நினைவுறும் அந்தரங்கமா?

வடித்த கண்ணீரின் சின்னமா-இல்லை
வடித்தெடுத்த அழகு சீதனமா?

உறங்கும் மும்தாஜின் பள்ளியறையா-இல்லை
ஓடும் யமுனையின் கலங்கரை விளக்கா?

காதல் நினைவின் அருங்காட்சியா-இல்லை
புனிதக் காதலுக்கு ஒரு சாட்சியா?

பார்த்து பார்த்து எழுப்பிய சித்திரமா-இல்லை
மக்கள் பார்த்து இரசிக்கும் விசித்திரமா?

பிரிந்ததில் விளைந்த இராக தீபமா-இல்லை
விளந்ததில் முளைத்த ஆலாபனையா?

எழுதியவர் : கோ.கணபதி (12-Nov-13, 11:08 am)
பார்வை : 103

மேலே