முருகக் கடவுள்
நலம் கூட்ட தினம் முகம் காட்ட வேண்டும்,
வளம் காக்கும் பரங்குன்றத்தில்,
குடி கொண்டிருக்கும் வேலவனே.
அனுதினமும் அத்தனையும் சிறப்பாக வேண்டும்,
அலைவீசும் செந்தூரில்,
அமர்திருக்கும் அற்புதக் கடவுளே.
சேவையும் நேர்மையும் உனதாக வேண்டும்,
பழம் வேண்டி காத்திருக்கும் பழனியில் ,
பக்தர் பணி நிதம் காக்கும் பழம் நீ ஆண்டவனே.
வாழ்வின் ஆதாரம் சீராக வேண்டும்,
பிரணவத்தின் பொருள் தந்த சுவாமி மலையில்,
சுடராய் கொள்ளை இன்பம் தரும் சுவாமி நாதனே.
நோயும் நொடியும் தெரியாப் பொருளாக வேண்டும்,
பிணி தீர்க்கும் தணிகை மலையில்,
குணம் காட்டும் குமரக் கடவுளே.
இகபர சுகமெல்லாம் இனிதாக வேண்டும்,
சோலை குயில் கூவும் பழமுதிர் சோலையில்,
முக்திக்கு முகம் காட்டும் முதல்வனே.
முருகனே முழு முதற் பொருளே,
நீயே கதி உன் சன்னதியே வழி என்று,
வணங்குகின்றேன்,அருள் புரிகவே.