சாதி
சகதியில் விழுந்தவன்
சாக்கு போக்குச் சொல்லி
சடுதியில்துணை சேர்த்து
எழுந்திரிக்க கண்டுபிடித்தது - சாதி !!!
சதி செய்ய குழிபறிக்க
கொட்டம் அடிக்க
கூட்டம் சேர்க்க
கண்டுபிடிச்சது தான் சாதி !!!
தின்ற சோறு செரிக்காமல்
வேலை வெட்டி இல்லாமல்
ஊர் மேயும் காளை
ஊர் பணத்தில் கொட்டிக்கிறவன்
கண்டுபிடித்தது தான் சாதி !!!