பூதம் வேண்டாம்
சீடன் ஒருவனுக்கு தன் வேலை எல்லாம் செய்ய ஒரு பூதம் வேணும் என்று ஆசை.அதை அவன் குருவிடம் கூறினான்.அதற்கு குரு முதலில் மறுத்து விட்டார்.
பின்,சீடனின் பிடிவாதத்தால் ஒப்பு கொண்டார்.ஆனால்,ஒரு கண்டிசன் நீ அதற்கு தொடர்ச்சியாக வேலை தர வேண்டும்.இல்லை என்றால் அது உன்னை கொன்று விடும் என்று.
இது சப்ப மேட்டர்னு சீடன் நினைத்து சரி என்றான்.பூதம் வந்தது.பின் என்ன,வசந்த மாளிகை,வீடு நிறைய தங்கம் என எல்லாம் வந்தது.ஆனால் அவனால் உறங்க முடிய வில்லை.ஒரு நொடியில் வீடே ரெடி பண்ற பூதத்தை.6 மணி நேரம் உறங்க போகும் போது என்ன வேலை தருவது.3 நாட்கள் உறங்கவே இல்லை .வெறுத்து போய் பூதமே வேண்டாம் என குருவிடம் சொன்னான்.அதற்கு குரு ஒரு முறை கொடுத்ததை திரும்ப பெற முடியாது என சொன்னார்.பூதமும் அவனை கொல்ல தயார் நிலையில் நின்றது.அவன் குருவே பேராசை பெரு நஷ்டம் ஆகி விட்டது.காப்பாற்றுங்கள் என்றான்.உடனே குரு சரி நான் சொல்லும் வேலையே அதனிடம் சொல்லு என்றார்.அவனும் அதை பூதத்திடம் சொன்னான்.பூதம் ஒரு வாரம் ஆகியும் அந்த வேலையே செய்ய முடியாமல் தவித்தது.
அவன் சொன்னது நாய் வாலை நிமிர்க்க சொல்லி ............................. ( எங்கோ கேட்டது )