கொலை
சூரியன் உதயமான நேரம்.எரிந்து கொண்டிருந்த வயல் காட்டை பார்க்கும் போது சூரியனே பற்ற வைத்ததோ என தோன்றும் அளவிற்கு தீ, வயல் காட்டை நாசம் செய்து கொண்டிருந்தது.நெருப்பில் எரியும் வயலில் மிஞ்சுவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும் தீயணைப்பு வீரர்கள் நீரை பாய்ச்சு கொண்டிருந்தார்கள்.சிவகிரி என செந்தாமரை அழைத்தார் .செந்தாமரை ஊரிலே பெரிய மனிதர்.
சிறுக சிறுக வளர்ந்து,தற்போது சொந்தமாய் ஒரு திருமண மண்டபம்,வயல் என வாழ்பவர்.என்னங்க அய்யா என சிவகிரி வந்தான்.சிவகிரி செந்தாமரையின் வலது கை ஆவான்.என்ன நடக்குது என கேட்டார் செந்தாமரை.
அய்யா மண்டபம் முழுசா எரிஞ்சு போச்சு.வயல்ல ஒண்ணும் தேராது.நம்ம வக்கீல் உங்கள கோர்ட்ல சரணடைய சொல்றாரு.செந்தாமரைக்கு முகம் எல்லாம் சிவந்தது.அந்த நன்றி கெட்ட நாய் சுப்பிரமணி செத்ததுக்கு நான் ஜெயிலுக்கு போகணுமா?என்று கர்ஜித்தார்.அய்யா நீங்க பஞ்சாயத்து ஆபீஸ்ல வச்சே அவன குத்தி கொன்னீங்க.ஊர்ல இருக்குற அவன் ஜாதி காரனுவோ நம்ம சொத்து எல்லாத்தையும் நாசம் ஆக்கிட்டானுவோ .ஊரே உங்களுக்கு எதிரா சாட்சி சொல்ல ரெடியா இருக்கு என்றான்.செந்தாமரை தன் தலையில் கை வைத்து,கண்களை மட்டும் தரையை நோக்கி பார்த்து கொண்டிருந்தார்.
சுப்பிரமணி செந்தாமரையின் கணக்கு வழக்குகளை பார்க்கும் அக்கௌன்டன்ட்.அவனுக்கு சென்னையில் உள்ள பிரபல கம்பனியில் வேலை கிடைத்தது.அதற்கு அவன் போகாமல் இருந்ததற்கு காரணம் செந்தாமரை மகள் மீது உண்டான காதல்.வள்ளியை சுப்ரமணிக்கு பிடிக்கும் அளவிற்கு அவள் அப்பாவுக்கும் பிடிக்கும்.வள்ளி அவள் பெயர் அழகானவள் அதுமட்டும் இன்றி நன்கு படித்தவளும் கூட. இலை மறை காயாய் இருந்த காதல் ஒரு நாள் செந்தாமரைக்கு தெரிய வர,புயலும்,சுனாமியும் காதலில் வீச தொடங்கியது.
சுப்ரமணியை வேளையில் இருந்து நிறுத்தி,ஆட்களை வைத்து மிரட்டி பார்த்தார்.அதற்கு அவன் பணியவில்லை.செந்தாமரையும் நல்லவர் தான்.ஜாதி என்ற துண்டை மாட்டி கொண்டதால் வந்த விளைவு அது.ஒரு நாள் திருட்டு கல்யாணம் செய்ய முயன்ற போது,சிவகிரி ஆட்களை கொண்டு தடுத்து விட்டான்.அதன் பின்னரே,
இனி விட்டால் சரி இல்லை என்று செந்தாமரை முடிவு எடுத்தார்.
என்னங்க என்று செந்தாமரையின் மனைவி அலற,திடுக்கிட்டு அவள் சத்தம் வரும் திசை நோக்கி ஓடினார்.அங்கே,சுப்பிரமணி இறந்ததை அறிந்து வள்ளியும் தன் மீது பெட்ரோல் ஊற்றி எரிந்து கொண்டு இருந்தாள்.செந்தாமரைக்கு ஒரு கணம் உலகமே சூனியம் ஆனது.தன் ஆசை மகள் எரிவதை கண்டு துடித்து போனார்.
வாழ்க்கையில் இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை என்பது போல் தோன்றியது.யார் உதவியும் இல்லாமல் தன் சொந்த முயற்சியில் முன்னேறி,இன்று பாழாய் போன ஜாதியால் எல்லாம் இழந்து நிற்கிறோம் என தோன்றியது செந்தாமரைக்கு.
இது பழைய கதை ஆனாலும் இன்று தொடரும் தொடர்கதை ஆகிறது.ஜாதிக்கு சாவு மணி அடிப்பது யாரோ ............................................