ஆடும் மீன்கள்
ஆடும் மீன்கள்
**************************
ஒரு மீனவன் தன வலையைக் கரையில் போட்டுவிட்டு ,புல்லாங்குழலை எடுத்து ஊத ஆரம்பித்தான் .அப்படி ஊதினால் மீன்கள் ஆடிக் கொண்டு வலையில் வந்து விழும் என்று அவன் நினைத்தான்.நீண்ட நேரம் வாசித்தும் ஒரு மீன் கூட வரவில்லை.மீனவனுக்குக் கோபம் வந்தது புல்லாங்குழலைக் கீழேவைத்துவிட்டு வலையை எடுத்துத் தண்ணீரில் வீசினான்.வலையில் ஏராளமான மீன்கள் அகப்பட்டன.வலையில் அகப்பட்ட மீன்களை பக்கத்தில் இருந்த பாறையில் போட்டான்.உடனே வலையில் இருந்த மீன்களெல்லாம் துள்ள ஆரம்பித்தன.அதைப் பார்த்த மீனவன்,''நான் புல்லாங்குழல் வாசித்தபோது நீங்கள் ஆடாமல் இருந்தீர்கள்.இப்போது ஆடுகிறீர்களே!எதற்காக?என்ன ஆடினாலும் உங்களை நான்விடப்போவதில்லை..''என்று சொன்னான்.
நன்றி ;இருவர் உள்ளம் தளம்