திருக்குறளே உயிகளின் உயிர்நீ
திருக்குறளே! உயிகளின் உயிர்நீ.
+ அமுதுகொல்! ஆய்பொருள்கொல்! முக்கனிச் சாறுகொல்!
அம்முப்பால் மாலும்என் நெஞ்சு.
+ உண்டார்கண் அல்ல[து] அடுநறா,முப்பால்போல்
உள்ள மகிழ்செய்தல் இன்று.
+ பாலொடு தேன்கலந்[து] அற்றே, திருக்குறள்
நூலொ[டு] அமைந்த நயம்.
+ உடம்பொ[டு] உயிரிடை என்ன,மற்[று] அன்ன
நம்மொடுமுப் பாலிடை நட்பு.
+ உள்ளுவன் மன்யான் மறப்பின், மறப்[பு]அறியேன்
வள்ளுவன் செய்த குறள்.
+ உரைப்பன்யான் முப்பால் உரையை, இறைப்பவர்க்[கு]
ஊற்றுநீர் போல மிகும்.
+ குறள்ஆம் பெருங்கடல் நீந்தி உரைகாணேன்,
யாமத்தும் உள்ளுவன் யான்.
+ உள்ளுவன் மன்யான், உரைப்பதும் முப்பால்ஆம்
உள்ளம் மகிழும் உயிர்த்து.
+ உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்,
வள்ளுவம் என்றும் இனிது.
+ மறப்பின் எவன்ஆவன் மன்கொல்! மறப்[பு]அறியேன்,
உள்ளும் புறமும் குறள்.
+ குறள்என ஒன்[று]இல்லை யாயின், புவியில்
உறைதல், உயர்தல்மற்[று] இல்.
+ உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
வள்ளுவன் வண்குறளுக்{கு] உண்டு.
+ துன்பத்திற்[கு] யாரே துணைஆவார்? முப்பாலார்
இன்பத் துணைஅல் வழி.
+ குறளும் பொருளும் இலையாயின், வாழ்க்கை
வறளும் இருளும் உணர்.
+ ஓதி உயர்வோம்நாம் என்றும், குறள்அறம் .
நாளும் மறவாது நன்கு..

