முடியும் என்றால் விடியும்
முடியும் என்றால் விடியும்
****************************************
[ ஊழையும் உப்பக்கம் காண்பர்
உலை[வு]இன்றித்
தாழா[து] உஞற்று பவர்.
திருக்குறள் 0620 ]
முடியும் முடியும் என்று---நீ
முடிவெடுத்து முயன்றால்---எதுவும்
முடியும் முடியும்---
விடியும் விடியும் என்று---நீ
விழித்தெழுந்தால்---எதுவும்
விடியும் விடியும்---
விடியல் வெளிச்சம்--வீட்டுப்
படியில் ஓடி வந்து
படியும் படியும்---
"செடியும், கொடியும் வாழ
முடியும்" என்றே--இந்தப்
படியில் முளைக்கும் போது--ஆறு
அடியும் உடைய மனிதா---!நீ
அடியோடு வீழ்தல் தகுமோ?
இடியும் வெடியும் தடித்து
முடியாத் தடைகளாய் வந்து
விடிந்தாலும்--அவைஎலாம்
மடியும்படி அடிமேல் அடியைத்
துடிப்போடு கொடுத்தல் ஆகாதோ?
அடியும் கடியும் வந்து
படியும் பயணத்தில்
நொடியும் நொந்திடால்--அவை
ஒடியும்படி ஓடும்படி--நீ
அடிஎடுத்து நடந்தால்
முடியாச் சோதனைகள் எல்லாம்
முடியும் முடியும்---
படியும் நம்பிக்கை--உன்
பிடியில் மடியில் வந்து
படிந்தால்--உன்னால்
முடியைத் தொடவும்
முடியும் முடியும்---
முடியும்--எதுவும்
முடியும் முடியும்--
விடியும்--எதுவும்
விடியும் விடியும்--