இந்த வகையிலாவது நன்மையே
இந்திய பிரதமர்தான் முதலில் யாழ்ப்பாணம் போயிருக்கவேண்டும் என்று வெளியுறவு அமைச்சார் சல்மான் குர்ஷித் வருத்ததோடு கூறியிருப்பது வேடிக்கையான விஷயம். பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் எவர் தடுத்தாலும் ஏற்காமல் ஈழத்தமிழ் மக்களை சென்று சந்தித்து அவர்களின் இழப்புகளை, ஏக்கங்களை தன் இதயத்தில் பதிவு செய்து இலங்கை அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது உலகத் தமிழ் மக்களின் இதயத்திற்கு ஆறுதலாய் இருக்கிறது. சர்வதேச விசாரணை கோரப்படும் என்ற அவரது பேச்சு மனித நேயத்தின் மீது அவருக்கு இருக்கின்ற மரியாதையையும் நேர்மனம் கொண்ட நெஞ்சுரத்தையும் காட்டுகிறது.
இந்த அரசியல் ஆண்மையை இந்திய பிரதமரிடம் எதிர்பார்க்க இயலாது என்பது என் தாழ்மையான கருத்து. மன்மோகன் சிங் போயிருந்தால் ராஜபக்சேயின் ஊதுகுழல்போல பேசியிருப்பார். வழக்கம்போல் ஈழத்தமிழர்களுக்கு இந்தியா செய்த உதவிபற்றி தனக்கே உரித்தான தாழ்ந்த குரலில் பேசி அம்மக்களின் வேதனைகளை மூடி மறைத்திருப்பார். ஆறுதல் தேடும் அம்மக்களுக்கு அவரது அலட்சியமே பரிசாக கிடைத்திருக்கும்.
இன்றுவரை இந்தியா இலங்கையின் அரசபயங்கரவாதத்தை ஒரு முறையாவது கண்டித்திருக்கிறதா? காமன்வெல்தை தண்டனை தீர்ப்பு வழங்கும் அமைப்பாக மாற்றக்கூடாது என்ற ராஜபக்சேயின் பேச்சைக்கூட இந்திய கண்டிக்கவில்லையே! எனவே இந்திய பிரதமர் இலங்கை போகாமல் இருந்தது ஈழத்தமிழ் மக்களுக்கு இந்த வகையிலாவது நன்மை பயக்கின்ற ஒன்றே.
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
