பாரத ரத்னா

மாமனிதர்களுக்குக் கொடுக்கும் பாரத ரத்னா விருதை நடிகர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் வழங்குவது அந்த விருதின் மரியாதையைக் குறைப்பதாகும். நடிகர்களும் சச்சினைப் போன்ற விளையாட்டு வீரர்களும் கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டார்கள். அவர்கள் குடும்பம் நன்றாக வாழ்கிறது. வசதியாக வாழ்வது அவர்கள் உரிமை. ஆனால் அவர்கள் சாதனைகளால் நாட்டுமக்களுக்கு என்ன பயன்?
ரசிகர்களைக் குஷிப்படுத்தி இருக்கலாம்? அதிகமான உணவை உண்டுகூட சிலர் சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்கிறார்கள்.எந்த விளையாட்டு வீரர் அல்லது நடிகராவது அந்தச் சாதனைகளை முறியடிக்க முடியுமா? போற்றத்தகு சாதனை என்பது எல்லாக் காலத்திலும் பெரும்பாலான மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கவேண்டும். நடிகர்களும் விளையாட்டு வீரர்களும் பிரபலமானவர்கள். புகழ்மிக்கவர்கள் அல்ல. Popularity என்பது பிரபலமாயிருத்தல். Fame என்பது புகழ் இது காலத்தை வென்று நிற்பது. Cinema stars and political leaders are popular. Popularity is short-lived. Great men are famous. Fame transcends time and space.
அந்த விருதின் மாண்பு காப்பாற்றப்பட வேண்டும். நடிகர்ளுக்கும் விளையாட்டு வீர்ர்களுக்கும் அவர்கள் சம்பாதித்த பெரும் பணம், எம்.பி போன்ற பதவியும் அவர்கள் துறை சார்ந்த விருதுகளுமே போதுமானது.நடிகர்களும் விளையாட்டு வீரர்களும் பாரத ரத்னா விருது பெறத் தகுதியானவர்கள் இல்லை
நடிகர்ளும், விளையாட்டு வீரர்களும் இரசனைக்குரியவர்கள். அவர்களை இரசிகர்கள்தான் போற்றுவார்கள். அறிஞர்கள் அவர்களை மாமனிதர்களாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் காலத்தை வென்று நிற்கும் ஆற்றல் படைத்தவர்கள் இல்லை. தியாகராஜ பாகவதர் இன்று பெரும்பாலோர்க்குத் தெரியாது, அவர் காலத்தில் நல்ல தமிழில், நல்ல உச்சரிப்புடன் பேசியதுடன் சொந்தக் குரலில் இன்று எந்த சினிமா பாடகரும் கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாத குரல் வளம் பெற்றிருந்தார். இன்று அவரை சினிமாக்காரர்களே மறந்துவிட்டார்கள்.
இதுதான் விளையாட்டு வீரர்களின் நிலையும். இரசனைக்குரியவர்களை மாமனிதர்கள் பட்டியலில் சேர்க்கக் கூடாது.