யார் நீ

நீல நிற தாவணி உடுத்தி
நீளமான பார்வை என்னும் அம்பை
நின் விழியின் மூலம் தொடுக்கிறாய் ! - அது
மௌனமாய் மனதை துளைகிறது !!
ஆனால்,
வெட்டுபட்ட என் இதையத்தை - உன்
வெள்ளை நிற துப்பட்ட
வெண் பஞ்சை போல்
ஒத்தடம் தருகிறதே !!

மழையில் பூத்த மல்லிகையா நீ ?
மலையில் துள்ளி விளையாடும்
மான் கூட்டத்தின் தலைவியோ நீ ? அல்லது
மண்ணில் வாழ்ந்து மறையாத
மகான்களின் மகளோ ? என தெரியாமல்
மயங்கி தவிக்கிறது !
மழலை போல் என் உள்ளம் !!

எழுதியவர் : சித்தராஜ் 007 (17-Nov-13, 2:17 pm)
Tanglish : yaar nee
பார்வை : 121

மேலே